குடிப்பெயர் பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரிக்கை

குடிப்பெயர் பணியாளர்களின் உரிமைகளை உறுதி செய்யுமாறு கோரிக்கை

கனாடவிற்குள் குடிப்பெயர்ந்துள்ள பணியாளர்களது உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு குடிப்பெயர்ந்துள்ள பணியாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தங்களது உரிமைகளை உறுதி செய்யுமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வார இறுதி நாட்களில் கனடாவின் பல்வேறு நகரங்கிலும் குடிப்பெயர் பணியாளர்களது உரிமையை உறுதி செய்யுமாறு கோரி விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கனடாவில் சுமார் 2.3 மில்லியன் குடிப்பெயர் பணியாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனேடிய பிரஜைகளுக்கு கிடைக்கப் பெறும் சலுகைகளும் வசதிகளும் குடிப்பெயர் பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.

குடிப்பெயர் பணியாளர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்த்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். 

மூலம் - கனடாமிரர்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image