தற்போது அபுதாபியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய தொற்றுநீக்கல் செயற்றிட்டத்தின் போது விதிக்கப்பட்டுள்ள நடமாட்டத் தடை கட்டுப்பாடுகளை மீறும் வகையில் செயற்படுபர்வகளுக்கு 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தலைநகரில் கடந்த ஜூலை மாதம் 19ம் திகதி தொடக்கம் அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைய நள்ளிரவு 12 மணி தொடக்கம் 5 மணி வரை தொற்றுநீக்கல் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதால் நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஆள் மட்டும் வாகன நடமாட்டம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் கட்டாயம் வீடுகளில் இருக்க வேண்டும். அத்தியவசிய தேவையாக இருந்தால் மாத்திரமே வௌியே நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை முன்கூட்டியே பெறவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
www.adpolice.gov.ae என்ற இணையதளத்தில் அல்லது அந்நாட்டு பொலிஸ் செயலியில் பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் வாகன அனுமதி மற்றும் தகட்டு இலக்கம் என்பவற்றை பதிவு செய்வதனுடன் அனுமதி வௌியில் செல்வதற்கான காரணம் எனபவற்றை குறிப்பிட்டு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும். மிக அவசியமான விடயமெனின் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்றும் அவ்வாறில்லையேல் அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.