தண்ணீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்துமாறு கூறி போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும் பொது மக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் டுபாய் தண்ணீர் மற்றும் மின் கட்டண அதிகாரசபை எச்சரித்துள்ளது.
அதிகாரசபையின் பெயர் குறிப்பிடப்பட்ட மின்னஞ்சல்கள் பரவலாக பலருக்கு அனுப்பப்படுறதாகவும் அதற்கு பதிலளிக்கும் முன்னர் டொமெயின் பெயரை சரிபார்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நம்பிக்கைக்குரிய ஊடகங்களினூடாக மாத்திரம் கட்டணங்களை செலுத்துமாறும் சமூக வலைத்தளங்களில் இவ்விடயம் தொடர்பாக வௌியிடப்பட்டுள்ள லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அதிகாரசவை எச்சரித்துள்ளது.