பொதுவிடங்களுக்குள் செல்வதற்கு அல் ஹொஸ்ன் (Al Hosn) செயலியை அனுமதியாக பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அபுதாபி அறிவித்துள்ளது.
குறித்த செயலியை பயன்படுத்தும் சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகி்றமையினால் குறித்த செயலியை அனுமதியாக பயன்படுத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று அந்நாட்டு அவசரநிலை, நெருக்கடி, அனர்த்தக் குழு அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறுகள் விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.