முகக்கவசங்களை பொதுவிடங்களில் வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபுதாபி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அந்நாட்டு பொலிஸாரின் உத்தியோகப்பூர்வ டிவிட்டரில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாகனங்களில் இருந்தவாறே முகக்கவசங்களை பொதுவிடங்களில் வீசுபவர்களுக்கு 1000 திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும். அத்துடன் 6 ட்ரபிக் புள்ளிகள் குறைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.