மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா திரிபு வைரஸ்- எச்சரிக்கு UAE

மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா திரிபு வைரஸ்- எச்சரிக்கு UAE

இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா திரிபு கொவிட் 19 வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளிலும் தற்போது அடையாளங்காணப்பட்டதையடுத்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஐக்கிய அரபு இராச்சியம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உடனடியாக கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறும் பாதுகாப்பு நடைமுறைகளை ஒழுங்கு முறையில் கையாளுமாறும் ஐக்கிய அரபு இராச்சிய மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சர்வதேச சுகாதார தாபனத்தின் வாராந்த அறிக்கைக்கமைய, சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் டெல்டா திரிபு வைரஸ் அடையாளங்காணப்பட்டுள்ளது. மிக ​வேகமாக பரவக்கூடிய வீரியம் மிக்க குறித்த வைரஸ், ஓமானில் இது வரை பரவவில்லையென உத்தியோகபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் இது குறித்த ஆராயப்படும் என்றும் உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய திரிபுகளை விட டெல்டா திரிபு அபயாகரமானது எனவும் தொற்றுக்குள்ளானவர்களுக்கு நோய் அறிகுறிகள் விரைவில் வௌியாகும் என்றும் உடனடியாக சிகிச்சைக்குட்படுத்த வேண்டும் என்றும் டொக்டர் மொஹம்மட் அயுப் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image