ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு பகுதகளில் புழுதிப்புயல் வீசுவதால் முகக்கவசமின்றி வௌியில் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு தேசிய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
All Stories
ஐக்கிய அரபு இராச்சியம் தொலைவில் இருந்து பணியாற்றுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றங்களை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (30) அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வௌிநாடுகளை சேர்ந்த விசேட துறைசார் நிபுணர்களுக்கு குடியுரிமை வழங்க டுபாய் அரச தீர்மானித்துள்ளது.
நீங்கள் டுபாயில் வசிக்கிறீர்களா? உங்களுடன் நெருங்கி பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதா? உடனடியாக நீங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன? இதோ உங்கள் தௌிவுக்கு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உரிமைகளை அதிகரிப்பது குறித்து தூதுவர் ஊடாக கலந்துரையாடலை மேற்கொள்ள தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தேசிய தடுப்பு வழங்கல் திட்டத்தினூடாக மார்ச் மாதம் இறுதியளவில் நாட்டின் 80 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி பண்டாநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்காக சென்றவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறுகிய கால பயணங்களுக்காக ஐக்கிய அமீரகம் சென்று நாடு திரும்ப தாமதமாகியுள்ள ஓய்வூதியம் பெறுவோர் தமது ஆயுள் சான்றிதழை மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்குமாறு அமீரகத்திற்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பின்வரும் விபரங்களை அனுப்பி வைக்குமாறு அமீரகத்திற்கான இலங்கைத் தூதரகம் பயனாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முழுப்பெயர்
தொடர்பு எண்/ மின்னஞ்சல் முகவரி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முகவரி
இலங்கை முகவரி
ஓய்வு எண்
ஆகிய விபரங்களை மேலே தரப்பட்டுள்ள முகவரியினூடாக அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது
வீடுகளில் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்களில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டால் அபராதம் விதிக்கப்படும் என்று டுபாய் அரசு அறிவித்துள்ளது.
படகில் சென்று கடலில் மூழ்கிய புலம்பெயர் தொழிலாளர் இரு மணித்தியாலங்கள் போராடி நீந்தி கரை சேர்ந்த சம்பவம் ஒன்று டுபாயில் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்று பரவியுள்ளபோதிலும் இலங்கையர்களுக்கு எல்லையற்ற வாய்ப்புகள் கொண்ட நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் காணப்படுகிறது என்று அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் தம்மிக்க மல்ராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதி உச்சத்தில் இருந்தபோது வேலையிழந்த பல இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு பதிவு செய்தனர். எனினும் அவர்கள் அமீரகத்திலேயே தங்கவைக்கப்பட்டதுடன் புதிய வாய்ப்புகளையும் பெற்றுகொண்டனர். நாட்டை விட்டு சென்றவர்கள் மறுபடியும் புதிய வாய்ப்புகளை பெற மீள திரும்பியுள்ளனர். இது ஐக்கிய அமீரகத்தில் தொழிலாளர் சந்தை வலுவாக உள்ளதை காட்டுகிறது.
பதிவு செய்தவர்களில் 7000- 8000 பேர் வரை மட்டுமே இலங்கை திரும்பினர். நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. நாடு திரும்ப பதிவு செய்தவர்களில் பலர் வேலையிழந்த அதே நிறுவனங்களில் மீள தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொண்டனர். சிலர் புதிய வாய்ப்புகளை பெற்றனர். நாட்டுக்கு சென்ற பலர் புதிய வாய்ப்புகளை தேடி மீண்டும் அமீரகம் வந்தனர். தூதரகம் அவர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகள் குறித்து தௌிவுபடுத்தியதுடன் புதிய தொழில்வாய்ப்புகளை பெற உதவிகளையும் வழங்கியது. எமது மீளனுப்பும் நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு இராச்சிய அரசு ஒத்துழைப்பு வழங்கியது என்றும் இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.