ஷார்ஜாவில் வீட்டு வாடகை அதிகரிப்பு முறை குறித்து அறிவீர்களா?

ஷார்ஜாவில் வீட்டு வாடகை அதிகரிப்பு முறை குறித்து அறிவீர்களா?

தெற்காசிய நாடுகளில் இருந்து பலர் வௌிநாட்டு வேலைவாய்ப்பினை நம்பி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர். சிலருக்கு தங்குமிட வசதிகளுடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

சிலர் வௌியில் தங்கியிருந்த பணியாற்ற வேண்டியேற்படும். வேறு சிலர் தங்குமிட வசதிகள் கிடைத்தாலும் தத்தமது குடும்பங்களுடம் புலம்பெயர்ந்துள்ளமையினால் வௌியில் தங்குவதற்கு அபாட்மன்ட்களை வாடகைக்கு எடுப்பார்கள். பொதுவாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் அப்பாட்மன்ட்களுக்கான வாடகை அதிகரிப்பதற்கான சட்டதிட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்று அது குறித்து அறிந்துகொள்வோம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா பகுதியில் வசிப்பவராக இருந்தால் ஷார்ஜா வாடகைச் சட்டத்தின் கீழ், நில உரிமையாளருக்கும் வாடகைக்காரருக்கும் இடையிலான உறவை ஒழுங்குப்படுத்துவதற்கான 2007ம் ஆண்டின் 2ம் இலக்க ஷார்ஜா சட்ட விதிகள் இதற்கு பொருந்தும்.

அதற்கமைய 3 வருடங்கள் பூர்த்தியடைந்த பின்னர் மட்டுமே நில உரிமையாளர் வீட்டு வாடகையை உயர்த்த முடியும். மூன்று வருடம் நிறைவடைந்த பின்னர் அதிகரிக்கப்பட்ட வாடகையுடன் இரண்டு வருட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவேண்டும். மீண்டும் வாடகை இரு வருடங்களின் பின்னர் மாத்திரமே அதிகரிக்க அனுமதியுண்டு. அதாவது இரண்டாவது வாடகை அதிகரிப்பானது 5 வருடங்கள் நிறைவில் மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

இது சார்ஜா வாடகைச் சட்டத்தின் 13ம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள வாடகைத் தொகையை 3 வருட பூர்த்தியடையாத நிலையில் எந்த காரணத்தினாலும் நில உரிமையாளர் அதிகரிக்க முடியாது.

ஆ. மேலே குறிப்பிடப்பட்ட காலத்தின் காலாவதியான பிறகு வாடகையின் அதிகரிப்பு சமமான மதிப்பாக இருக்கும்.

இ. மூன்றாடு நிறைவில் அதிகரிக்கப்பட்ட வாடகையானது மறுபடி இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையும் வரையில் அதிகரிக்கப்படக்கூடாது.

மேற்கூறிய சட்டத்தின் அடிப்படையில், முதல் மூன்று ஆண்டுகள் நிறைவில் வாடகை அதிகரிக்கப்படக்கூடும். ஆனால் அது நியாயமான அதிகரிப்பாகவும் அப்பிரதேசத்தில் உள்ள ஒத்த குடியிருப்புக்களின் வாடகையை ஒத்ததாகவும் இருக்க வேண்டும் என அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நில உரிமையாளர் அதிகரித்த வாடகையானது அதிகமாக இருப்பின் குறைக்குமாறு கோரலாம். அதற்கு அவர் இணங்காவிடின் ஷார்ஜா வாடகைக் குழுவை நாடி முறைப்பாட்டைப் பதியலாம்.

ஷார்ஜா வாடகைச் சட்டத்தின் 14வது சரத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடகைக்குழு இரு தரப்பிருடைய நியாயங்களை ஆராய்ந்து நியாயமற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்யும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image