பொதுவிடங்களுக்குள் செல்ல 'கிறீன் பாஸ்'- அபுதாபி

பொதுவிடங்களுக்குள் செல்ல 'கிறீன் பாஸ்'- அபுதாபி

பொதுவிடங்களுக்குள் நுழைவதற்கு கிறீன் பாஸ் அவசியம் என அபுதாபி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நவீன அங்காடிகள், உடற்பயிற்சி நிலையங்கள்,ஹோட்டல்கள் மற்றும் பொதுப்பூங்காக்கள், கடற்கரைகள், தனியார் கரையோர பிரதேசங்கள், நீச்சல் தடாகங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு நிலையங்கள் மற்றும் நூதனசாலை, உணவகங்கள் என்பவற்றுக்குள் நுழைய இந்த கிறீன் பாஸ் மிக அவசியம் என்று அபுதாபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 15 முதல் இப்புதிய நடைமுறை அறிமுகமாகவுள்ளது.

இந்த கிறீன் பாஸ் பெற 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று அபுதாபி அவசரநிலை, அனர்த்த குழு அறிவித்துள்ளது.

இப்பாஸ் முறையானது கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டமை மற்றும் பிசிஆர் பரிசோதனை முறை என்பவற்றை கருத்திற்கொண்ட வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image