கொவிட் 19 பரவல் தடுப்பு நடவடிக்கைள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அபுதாபி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நள்ளிரவு நடமாட்டம், பரிசோதனை, நாட்டுக்குள் உள்நுழைதல் மற்றும் விற்பனை அங்காடிகள், திரைப்படகூடங்கள் மற்றும் பொதுவிடங்களுக்கு செல்தல் என்பவற்றுக்கு புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை (19) தொடக்கம் புதிய சுகாதார நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் அனர்த்த குழு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்வதனூடாக கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
தலைநகரில் தேசிய கிருமி நீக்கல் நடவடிக்கையும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் தினமும் நள்ளிரவு தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை கிருமி நீக்கம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொது மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதுடன் வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.