ஶඹෟෑஇலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் விமானங்களுக்கான தடையை நீடிக்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளாக அந்நாட்டு விமானசேவைகள் அதன் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இத்தடையானது இம்மாதம் 15ம் திகதி வரை தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புபட் பயணித்த பயணிகள் 14 நாட்களுக்கும் அமீரகம் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.
எனினும் இத்தடையானது ஐக்கிய அரபு இராச்சிய குடிமக்கள், அந்நாட்டு கோல்டன் வீசா பெற்றவர்கள், இராஜதந்திர அங்கத்தவர்கள் ஆகியோருக்கு செல்லுபடியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதித்துள்ளதாக அமீரகம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. பாகிஸ்தானில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் வருவதற்கு தடை விதித்த முதலாவது நாடு அமீரகம் ஆகும். கடந்த மே மாதம் 12ம் திகதி நள்ளிரவு 11.59 முதல் பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.