அரசின் இறுதித் தீர்மானம் வௌிவரும் வரை UAE வர முயற்சிக்க வேண்டாம்!

அரசின் இறுதித் தீர்மானம் வௌிவரும் வரை UAE வர முயற்சிக்க வேண்டாம்!

அரச அதிகாரிகள் இறுதித் திகதி மற்றும் நடைமுறையை வெளியிடும் வரை வௌிநாடுகளில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய வாழ் மக்களை மீள திரும்புவதற்கான விமான டிக்கட்டுக்களை பதிவு செய் வேண்டாம் என்று UAE பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறை உட்பட பல நோக்கங்களுக்காக சென்ற இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களிடமே UAE பயண முகவர்கள் இவ்வறிவுறத்தலை முன்வைத்துள்ளனர்.

குறித்த நாடுகள் பல்வேறு புதிய கொவிட் 19 திரிபுகள் பரவி வரும் நிலையில் அவை ஐக்கிய அரபு இராச்சியத்துக்குள் நுழையும் ஆபத்துள்ளமையினால் குறித்த நாடுகளில் இருந்த பயணிகள் வருகைத் தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதான விமானசேவைகள் பயணிகளுக்கான விமான டிக்கட்டுக்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கினாலும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது சிவில் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் தேசிய அவசரநிலை, இடர்கால மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி என்பன குறித்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள தமது வீடுகளுக்கு வந்து சேர மக்கள் ஆர்வத்துடன் நம்பிக்கையின்மையுடன் இருக்கும் நிலையில் அவசரப்படாமல் அரசாங்கம் வழங்கும் இறுதித் தீர்மானம் என்ன என்பதை ஆராய்ந்தறித்த பின்னர் UAE வருவதற்கான டிக்கட்டுக்களை பதிவு செய்யலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் செலுத்திய பணத்தை மீள வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து பதிவு செய்வது சிறந்தது. சில சமயங்களில் 7 மாதங்களின் பின்னர் செலுத்திய பணத்தை மீள வழங்கும் நிலை காணப்படுகிறது.

 

Author’s Posts