இன்று நாட்டின் பல பாகங்களில் மழைப் பெய்யக்கூடும் என்று அபுதாபி வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
காலை வேளையில் மேக மூட்டமாகவும் பகலில் வெப்பம் கூடிய காலநிலையும் தோன்றக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கரையோரப்பிரதேசங்களில் காலை வேளை மேகங்கள் பதிவாக காணப்படலாம் என்றும் பிற்பகல் மேக்கூட்டம் தெற்கு நோக்கி நகரக்கூடும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கிலிருந்து வட கிழக்காக தூசுடன் கூடிய காற்று வீசக்கூடம் என்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.