தகமையுடைய ஐக்கிய அரபு இராச்சிய குடியுரிமையல்லாதவர்களுக்கு கோல்டன் வீசா வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக UAE அரசு அறிவித்துள்ளது.
தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிப்போர் மற்றும் வசிக்காதோர் என இரு தரப்பினரும் கோல்டன் வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தினூடாக ஒரு இலட்சம் கோல்டன் வீசாக்கள் வழங்கப்படவுள்ளன.
அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் வயதினரும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் செயற்கை நுண்ணறிவு அலுவலகம், அடையாள மற்றும் குடியரிமை மத்திய ஆணையகத்தினூடாக கோல்டன் வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.