கொவிட்-19 தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்தார்.
All Stories
10 மாவட்டங்களில் 70 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட அரச துறை தொழில்நிலை அளவீட்டின்படி, மொத்த அரச துறைதொழில்நிலை 201இ,ன் 1.467 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியில் 1.528 மில்லியனுக்கு அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயணக்கட்டுபபாடுகள் விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அறியத் தந்து தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான மாவட்டரீதியில் அவசர அழைப்பு மையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அபயாகரமான நிலைமையைக் கருத்திற்கொண்டு தனியார்துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுமுறை வழங்குமாறு ரெட் அமைப்பு மற்றும் வர்த்தக வலயங்களை அண்மித்து பணியாற்றும் தொண்டுக்குழுக்கள் தொழில் வழங்குநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக கண்டி, குருணாகல மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டம் ஆரம்பிப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் 11 இலட்சம் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
நாட்டில் நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 386 பேரில், அதிகமானோர் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளனர்.
நாளாந்தம் கொவிட்-19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்ட பின்னரே தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மாற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயாகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டத்தடை நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
கொவிட் 19 தொற்றுறுதியான போதிலும் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டாதவர்களை வீட்டிலேயே வைத்து பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் வேலை திட்டத்திற்காக பயிலுனர்களை கட்டாயப்படுத்தி அழைப்பதை ஆட்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.