கொவிட் நோயாளர்களுக்கான சிகிச்சை தொடர்பில் புதிய அறிவித்தல்

கொவிட் நோயாளர்களுக்கான சிகிச்சை தொடர்பில் புதிய அறிவித்தல்

கொவிட் 19 தொற்றுறுதியான போதிலும் நோய் அறிகுறிகளை வெளிக்காட்டாதவர்களை வீட்டிலேயே வைத்து பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே இதனை தெரிவித்துள்ளார்.

உடல் நிலை மோசமடைந்தால் தொற்றுறுதியானவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுறுதியான நிலையில் சிகிச்சை நிலையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே கூறியுள்ளார்.

Author’s Posts