தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவின் சேவைகளை இன்றும் (12), நாளையும் (13) இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
All Stories
பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு இரவு முதல் அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன லீவு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (10) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் கொவிட் தொற்று தடுப்பிற்காக செயற்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை தம்மால் உரிய முறையில் செயற்படுத்த முடியாத காரணத்தால் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் நாளாந்த செயற்பாடுகளில் பொது சுகாதார பரிசோகர்களுக்கான கடமைகள் என்னவென்பது தொடர்பிலான தெளிவு படுத்தல் எமக்கு தேவை என கோரிக்கை விடுக்கப்பட்ட போது சில தீர்மானங்களை அரசு எமக்கு முன்வைத்து அதற்கு அமைவாக செயற்படுமாறு கூறினார்கள்.
எனினும் குறித்த தீர்மானங்களை செயற்படுத்த அவர்கள் தவறிவிட்டனர். இதனூடாக தொழிற்சங்க உரிமைகளை நாம் கோரவில்லை. பதுளை மக்களுக்கு ஆரோக்கியமான சுகாதார சேவையை மேற்கொள்வதற்கான தேவைக்காகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முன்னெடுக்க தாம் தீர்மானித்தோம் என்றார்.
இன்று (11) நள்ளிரவு தொடக்கம் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
உரிமையாளர் அற்ற போலி சமூக வலைத்தளங்களை நீக்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்திருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் இம்மாதம் நடத்தப்படவிருந்த துறைசார் நிறுவன பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மே மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தரப்பினருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாhக அரச சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை, மாத்தளை, கண்டி, புத்தளம் முதலான நான்கு மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றினால் நாட்டில் நேற்று 3 மாத குழந்தை உட்பட 26 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டை முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை என கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.