சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளியே செல்வது குறித்த அறிவித்தல்

சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளியே செல்வது குறித்த அறிவித்தல்

நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டத்தடை நாளை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரையில் நடமாட்டத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில்; வெளியில் செல்ல முடியும்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும்.

பூச்சியம் எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் 17ஆம் திகதி என்பதனால், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டவர்கள் மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

இந்த முறைமையை மீறுகின்றவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாளைமுதல் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியில் செல்வோர், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தினால், அவற்றில் உள்ள அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியில் நடமாட முடியுமே தவிர, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திர இலக்கங்கள் அடிப்படையில் அல்ல எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image