பட்டதாரிகள் - குறைவருமானம் ஈட்டுவோருக்கான தொழில்வாய்ப்பு: மத்திய வங்கியின் தகவல்
மத்திய வங்கியினால் நடத்தப்பட்ட அரச துறை தொழில்நிலை அளவீட்டின்படி, மொத்த அரச துறைதொழில்நிலை 201இ,ன் 1.467 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2020 இறுதியில் 1.528 மில்லியனுக்கு அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இது அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகள் மற்றும் அரசுசார் நிறுவனங்களிலுள்ள ஊழியர்களையும் உள்ளடக்குகிறது.
அரசதுறை தொழில்நிலையில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பிற்கு 60,000 தொழிலற்ற பட்டதாரிகளுக்கும், குறைந்த வருமானமீட்டுவோர் மட்டத்திலுள்ள 100,000 ஆட்களுக்கு தொழில் வழங்கப்பட்டமையும் காரணங்களாக அமைந்தன.
ஆழமாக வேரூன்றியுள்ள பாதிக்கப்படும் தன்மையினை வெளிக்காட்டுகின்ற விதத்தில், முறைசாரா தொழில்வாய்ப்பு கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட கட்டுப்படுத்தல் வழிமுறைகளுக்கு மத்தியிலும் முறைசாராத்துறை அதன்
ஜீவனோபாயத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
முறைசாராத் துறையின் தொழில்நிலை எந்தவொரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தினாலும் பாதுகாக்கப்படாததினால் அவர்கள் தொழிற்படையிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகையினராகவும் இடர்ப்பாடான சூழ்நிலைகளில் வறுமைக்கோட்டிற்குள் வீழ்ந்து விடக்கூடியவர்களாகவும் இருப்பதனால் தற்காலிக வருமான ஆதரவு தேவைப்படுபவர்களாகவுள்ளனர்.
எனவே, நாட்டின் பாரிய முறைசாராத் தொழிலினை ,லக்காகக் கொண்டு சமூக பாதுகாப்பு வழிமுறைகளை இலக்கிடுவது ,இத்துறையிலுள்ள மக்களின் நலனோம்புகளை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமானதாகும் என இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.