எதிர்வரும் 17ஆம் திகதி முதல், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு மாறாக, வீடுகளில் இருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமையான செயற்பாடுகளுக்காக, பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளில் இருந்து வெளியே பயணிக்க வேண்டும்.
இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில்; வெளியில் செல்ல முடியும்.
அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள் இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும்.
பூச்சியம் எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள், எதிர்வரும் 17ஆம் திகதி வெளியே செல்ல முடியும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.