தனியார்துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுமுறை வழங்குக

தனியார்துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுமுறை வழங்குக

நாட்டில் நிலவும் அபயாகரமான நிலைமையைக் கருத்திற்கொண்டு தனியார்துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுமுறை வழங்குமாறு ரெட் அமைப்பு மற்றும் வர்த்தக வலயங்களை அண்மித்து பணியாற்றும் தொண்டுக்குழுக்கள் தொழில் வழங்குநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

28 வாரங்கள் கடந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்படின் அது மிக அபாயகரமானது என்று விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் கர்ப்பிணி ஊழியர்களை சேவைக்கு அழைப்பதில்லை என்று அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் மிகவும் முக்கியமானது. இதேபோல் தனியார்துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண் ஊழியர்களுக்கு அவ்வாய்ப்பு கிடைக்குமாயின் அது மிக சிறந்த தீர்மானமாகும் அவ்வமைப்புகள் தொழில் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார்துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் குறித்து இது வரை எவ்வித தீர்மானமும் எந்த துறையினரும் எடுக்கவில்லை. சில நிறுவனங்கள் கர்ப்பிணி ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நிறுத்தி வேலையில் இருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளன. சில தங்குமிடங்களில் சமூக இடைவௌியை பின்பற்றுவது கடினமான விடயம் என்பதனால் கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் பல நிறுவனங்கள் தொற்றுக்குள்ளாகிய ஊழியர்களை மாத்திரம் சேவையில் இருந்து நிறுத்தி விட்டு ஏனையோரை சேவையாற்றுமாறு பணிக்கின்றன. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் தொற்றுக்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது என்றும் அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

டாபிந்து அமைப்பு, சிரமபிமானி கேந்திரம், ஜனகலப்புவ அமைப்பு, சவிஸ்த்திர தேசிய பெண்கள் அமைப்பு, சமூக நீதிக்கான பெண்கள் செயற்பாட்டு அமைப்பு என்பன கையெழுத்திட்டு இக்கடிதத்தை தொழில் அமைச்சருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image