பிளாஸ்ரிக் போத்தல்களுக்கும் இனிமேல் வைப்புப் பணம் நடைமுறை

பிளாஸ்ரிக் போத்தல்களுக்கும் இனிமேல் வைப்புப் பணம் நடைமுறை

ப்ளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் முதலானவற்றினை தடைசெய்யும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, ப்ளாஸ்ரிக் போத்தல்களில் அடங்கியுள்ள பானங்களை கொள்வனவு செய்யும்போது, வைப்புப் பணம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரான, விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்ணாடி போத்தல்களில் அடங்கியுள்ள பானங்களை கொள்வனவு செய்யும்போது, வைப்பு பணம் செலுத்தும் முறைமை பயன்பாட்டில் உள்ளது. இந்த வைப்புப் பண முறைமையை ப்ளாஸ்ரிக் போத்தல்களுக்கும் பயன்படுத்த அமைச்சு எதிர்பார்க்கிறது.

இதற்கமைய, நுகர்வோர், ப்ளாஸ்ரிக் போத்தலிலுள்ள பானத்தை அருந்திய பின்னர், போத்தலை விற்பனை நிலையத்தில் மீள கையளித்து, வைப்புப் பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரான, விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image