பொது மக்கள் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட ரீதியில் அவசர அழைப்பு மையம்

பொது மக்கள் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட ரீதியில் அவசர அழைப்பு மையம்

நாட்டில் பயணக்கட்டுபபாடுகள் விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அறியத் தந்து தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான மாவட்டரீதியில் அவசர அழைப்பு மையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் உள்ள, பிரதமரின் செயலாளரது நேரடி பார்வையில் செயற்படுத்தப்படும் ஜனாதிபதி செயலணியின் பிரதான செயற்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக இந்த அவசர அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்பு , வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமைய இவ்வசர அழைப்பு அமையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இவ்வசர அழைப்பு மையத்துடன் தொடர்புகொண்டு பொது மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts