நாட்டின் பணவீக்கம் 2021 டிசம்பரின் 12.1 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
All Stories
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இன்று (31) தொடக்கம் தடுப்பூசி வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பயிலுநர் பட்டதாரிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி பொது சேவைகள் அமைச்சிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் பெப்ரவரி மாதம் முழுவதும் மின்சாரத் தேவையை நிர்வர்த்திக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை தொழிற்சங்க நடவடிக்கைக்கு தூண்டாமல் ஐந்தாயிரம் கொடுப்பனவு உட்பட முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை போக்குவரத்து சேவை ஊழியர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நாட்டில் மேலும் 82 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ரபிட் அண்டிஜன் பரிசோதனைக்கான உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் கொவிட் நோயாளர்களை அடையாளங்காண்பதில் மாத்திரமல்ல மிக அவசியமான சத்திரசிகிச்சைகளும் தாமதமாவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வாழும் மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
உதவி ஆசிரியர்களுக்கான நியமனத்தை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.
இதுவரை நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத மற்றும் நியமனம் தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பட்டதாரிகள் தங்களது தகவல்களை வட்ஸ்அப் செய்யுமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.