டிசம்பரில் 12.1 சதவீதத்திலிருந்து ஜனவரியில் 14.2 சதவீதத்திற்கு பணவீக்கம் அதிகரிப்பு

டிசம்பரில் 12.1 சதவீதத்திலிருந்து ஜனவரியில் 14.2 சதவீதத்திற்கு பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டின் பணவீக்கம் 2021 டிசம்பரின் 12.1 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்

 கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013ஸ்ரீ100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 டிசம்பரின் 12.1 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2021 டிசம்பரின் 6.0 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 6.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 டிசம்பரின் 22.1 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 25.0 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 டிசம்பரின் 7.5 சதவீதத்திலிருந்து 2022 ஜனவரியில் 9.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

மத்திய வங்கியின் முழுமையான அறிக்கை இங்கே

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image