தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை காரணமாக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 6 மாதங்களாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை காரணமாக இன்னும் ஒரு மாத காலத்தில் க.பொ.த உயர்தரத்தில் தோற்றவுள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மின்சார பிரச்சினைக்கு பின்னால் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை முழு நாட்டுக்கும் தௌிவாகியுள்ளது.
இந்த மின்சாரத் தடையின் பின்னணியில் பாரிய மோசடியும், ஊழலும் இருப்பதும், அரசியல் காரணங்களுக்காக மின் உற்பத்தியில் முறைகேடு நடப்பதும் தற்போது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரியவந்துள்ளது..
மில்லியன் கணக்கான பணம் தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் பாடசாலை மாணவர்களின் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த மாஃபியாவின் செயற்பாடுகளுக்கு இலங்கைச் சிறுவர்கள் இரையாவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் பிரியந்த பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.