கிழக்கில் 1400 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் தபாலில்

கிழக்கில் 1400 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் தபாலில்

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 2000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நேற்று முன்தினம் (26) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

நாடளாவிய ரீதியில் 53 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச தொழிலில் உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக 1950 பட்டதாரி பயிலுனர்களை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உள்வாங்கப்பட்டு 600 பேருக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கி வைக்கப்பட்டது

ஏனையவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அரச துறையில் தொழில் கிடைப்பது நீங்கள் கொடுத்து வைத்திருக்கும் வரப்பிரசாதமாகும் எனத் தெரிவித்தார்.

பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் பல பகுதிகளில் அரச நியமனங்களை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்று அனைவருக்கும் நியமனம் வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

இவ்வாறான சூழ்நிலைகளில் உங்களுக்கு இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே நியமனம் பெறுகின்ற இடங்களில் ஐந்து வருடங்களாவது நீங்கள் சேவை ஆற்ற வேண்டும் எனவும், பின்னர் இடமாற்றம் தொடர்பில் எவ்விதமான அழுத்தங்களும் கொடுக்க கூடாது எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதன்போது தெரிவித்தார்.

Trinco 1

trinco 2

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image