வேலையற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கும் திட்டம் 2020 இன் கீழ் சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான சம்பளம் மற்றும் பயிற்சிக்கான கொடுப்பனவு 03.01.2022 வௌியிடப்பட்ட அறிக்கைக்கமைய வழங்கப்படும் என்று பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பதவி வருவதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் விசேட அவசியம் உடையவர்கள் ஆகியோரை சேவைக்கு அழைப்பதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை மீண்டும் வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் சேவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதாக அரசாங்க தரப்பினர் அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ எந்த ஒரு தயார் நிலையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பிரிவெனா ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்காதிருக்க மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (07) கல்வியமைச்சின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரச சுகாதார ஊழியர்கள் நாளை (07) காலை 7.00 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் 2020 பயிற்சி கொடுப்பனவுகளை செலுத்துதல் தொடர்பான அறிவித்தலை அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது,
இதுவரை ஒன்றிணைந்த சேவை மற்றும் மாகாண சேவைகளுக்கு அபிவிருத்தி அதிகாரிகளாக இதுவரை நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு நாளை (07) தொடக்கம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த பட்டதாரிகள் மத்திய நிலையம் தீர்மானித்துள்ளதாக இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளும் உரிமையை அரசியல் யாப்பில் தடை செய்யவேண்டும் என்ற நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு 'பொதுச்சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் வன்மையாக கண்டித்துள்ளது.
தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது. இதற்கு இரு நாட்டு அரசுகளும் இடமளிக்கக்கூடாது.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வெற்றிடங்களை PACIS மென்பொருளில் இற்றைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.