ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
All Stories
தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு வழங்காவிடின் இன்று (19) கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் நிறைவடைந்து சில மணி நேரங்களில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர்களுக்கான சம்பள முறையினை பிரிவெனாக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தமது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் நன்றியறிதலின் முக்கியதுவத்தை எடுத்துயம்பும் பொங்கல் நாளில் தொடர்ந்தும் உங்கள் மதவுரிமையை பாதுகாப்பேன் என உறுதியளிக்கின்றேன்.
அவரவர் அடையாளத்தை பாதுகாப்பதும், ஏனைய மதத்தினரை மதிப்பதும் உயரிய மனித குணமாகும். அவ்வாறான குணவியல்பை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். எனது தந்தை பெருந்தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமையை வழங்கி அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தார்.
அவரே பிரஜா உரிமை என்ற முதலாவது போராட்டத்தை தொடங்கி வெற்றிப் பெற்றார். அதேபோல் பெருந்தோட்ட மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றும் இரண்டாவது போராட்டத்திலும் பிரேமதாஸவின் மகன் வெற்றி பெற்று தருவார். சிலர் இன, மத, குல பேதங்களை பயன்படுத்தி என்னை சாடினர். அதை கண்டு நான் அச்சமடைய போவதில்லை.
எனது ஆட்சியில் இன, மத, குல மற்றும் அடிப்படைவாதம் போன்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் பொதுவானதொரு ஆட்சி நடக்கும். இன்று சில மதவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் மக்களின் துயரம் தெரிவதில்லை. ஆட்சியாளர்களுக்கும் இது தெரிவதில்லை.
காரணம் அவர்கள் கையில் கேஸ் வெடிப்பதில்லை, அவர்கள் கேஸ் வரிசையில் நிற்பதில்லை. அவர்கள் பசளையின்றி கஷ்டப்படவில்லை. அவர்கள் அரசி, சீனி, எண்ணெய் வரிசைகளில் எப்போதும் நிற்பதில்லை. அவர்களுக்கு ஒருபோதும் பால்மா பிரச்சினையில்லை அல்லவா?
காரணம் அவர்களுக்கு அவை எல்லால் அரண்மனைக்கு கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றது. தயவுசெய்து விழித்துக் கொள்ளுங்கள். மதவாதம், பிரிவினைவாதத்திற்கு மீண்டும் ஏமாற வேண்டாம். ஆகவே எமது தாய்நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் கைகோர்த்து செயற்படுவது அவசியம்.
இயற்கை குளிர் காற்றை வழங்கினாலும் மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது. இன்று தரித்திரம் தலை தூக்கியுள்ளது. இன்று இந்தியா மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குகின்றது. இதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆகவே பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். வேறு யாருக்கும் இது முடியாது' என்றார்.
அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மலையக பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குமாறு கல்விமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக சுமார் இரண்டு வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, ஆனால் அந்த காலப்பகுதியில் வசதிகள் மற்றும் சேவைகளுக்காக ஆயிரக்கணக்கான பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறான நெருக்கடியான சூழலுக்கு இடமளிப்பதற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்று அகப்படுத்தப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது என தொழில் அமைச்சர் தெளிவாக தெரிவித்திருக்கின்றார். நான் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.