தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமான அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பல மருத்துவமனைகளில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வாட்டுகள் மீள பெறப்பட்டு வேறு நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்தப்படுகின்றமையினால் மருத்துவமனை கொள்ளளவுக்கும் அதிகமாக நோயாளர்கள் நிரம்பியுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது. சரியான தரவுகள் ஊடகங்களில் வௌியிடப்படாவிடினும் நாளொன்றுக்கு 2000 தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுகின்றனர். இவ்வதிகரிப்பு காரணமாக வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. அதேபோன்று சிகிச்சைக்கான மத்தியநிலையங்களில் பெறும்பாலும் இடவசதி மிகவும் குறைந்துள்ளது. சிகிச்கை மத்திய நிலையங்களான ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான இடங்கள் மீள கையளிக்கப்பட்டு விட்டன. இருக்கும் இடங்களும் நிரம்பி வழிகின்றன. எதிர்வரும் காலங்களில் சுகாதாரதுறையால் சமாளிக்க முடியாத அளவுக்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது. நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றே எதிர்காலத்தில் இறப்பு வீதமும் அதிகரிக்கும அபாயம் தோன்றியுள்ளது என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் தேவைக்கமைய, வைத்தியசாலை கொள்ளளவை அதிகரிக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன என்று பிரதி சுகாதாரசேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

 எந்தவகையான கொவிட் பிறழ்வு நாட்டுக்குள் நுழைந்தாலும் அதனை சமாளிக்க சுகாதாரத்துறைக்கு இயலுமை உள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image