மேல் மாகாண சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

மேல் மாகாண சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை துணை சேவை உத்தியோகத்தர்கள் இன்று (26) காலை 7.00 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த சுகாதாரத்துறை துணை சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சுகாதாரத்துறை துணை சேவை உத்தியோகத்தர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மாகாணரீதியாக முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தின் இறுதி மாகாணமாக இன்று மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது வடக்கு கிழக்கு உட்பட 8 மாகாணங்களில் ஏற்கனவே பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன.

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்படாவிடின் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இருந்து தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image