ரபிட் அண்டிஜன் பரிசோதனைக்கான உபகரணங்களுக்கு பற்றாக்குறை

ரபிட் அண்டிஜன் பரிசோதனைக்கான உபகரணங்களுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் ரபிட் அண்டிஜன் பரிசோதனைக்கான உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் கொவிட் நோயாளர்களை அடையாளங்காண்பதில் மாத்திரமல்ல மிக அவசியமான சத்திரசிகிச்சைகளும் தாமதமாவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது, மருத்துவமனைகளின் தேவைக்காக கொள்வனவு செய்யுமாறு கோரப்பட்ட ஆன்டிபாடி பரிசோதனைகள் உபகரணங்களை மருந்து கொள்வனவு பிரிவு கொள்வனவு செய்ய தாமதித்தமையினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சுகாதார அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளனர்.

கொவிட் செயலணி உருவாக்கப்பட்டு சுகாதார செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையினால் தொழில் வல்லுநர்களுக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் தீர்மானங்கள் எடுக்கும் பொறிமுறை இல்லாது போனதுடன் கொவிட் செயலணி ரத்து செய்யப்பட்ட பின்னர் அடிமட்ட பிரச்சினைகள் தொடர்பில் கூட வாய்ப்பு இல்லாமல் போயுள்ளமையினால் இந்நிலை தோன்றியுள்ளது.

ஒரு மலேரியா, யானைக்கால் நோயாளர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் அந்நோய் தொடர்பில் வல்லுநர்கள் தினமும் கலந்துரயாடி வந்தநிலையில் கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு இடையில் எவ்வித கலந்துரையாடலும் முன்னெடுக்காமையினூடாக கொவிட் செயலணியுடன் கொவிட் தொற்றையும் சில சுகாதார அதிகாரிகள் அது கலைக்கப்பட்டதாக நம்புகிறார்கள்.

எவ்வாறாயினும், இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை இரத்தினபுரி, அம்பாறை, கராப்பிட்டி, பேராதனை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பல வைத்தியசாலைகளின் உடனடி ஆன்டிபாடி பரிசோதனைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு நோய் அறிகுறிகள் உள்ள நோயாளர்கள் எந்த வைத்தியசாலைக்கு சென்றாலும் அவர்களுக்குரிய சிகிச்சை அல்லது சத்திரசிகிச்சையை செய்வதற்கு முதல் அவருக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு பரிசோதனை செய்வது அவசியம் என்றபோதிலும் உபகரண பற்றாக்குறை காரணமாக கொவிட் தொடர்பான பிரச்சினைகள் மாத்திரமல்ல, அனைத்து நோயாளர்களுக்கும் சிகிச்சைகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது.

உடனடி சிகிச்சைக்கான பரிசோதனைக் குறைப்பாட்டை PCR பரிசோதனையூடாக ஈடு செய்ய முடியும் என்று சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறித்து நாங்கள் வியப்படைகிறோம். PCR ஊடாக செய்யப்படும் பரிசோதனையை ரபிட் அண்டிஜன் ஊடாகவோ அல்லது ரபிட் அண்டிஜன் ஊடான பரிசோதனையை PCR ஊடாகவோ ஈடு செய்ய முடியாது என்பது ஆய்வுகூட சேவையில் அடிப்படையில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நாயின் வேலையை கழுதைக்கு வழங்கி சுகாதார அமைச்சின் பிரச்சனையை மென்மேலும் சிக்கலுக்குள்ளாக்கி வருகின்றனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image