நாட்டில் மேலும் 82 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின், ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு நடத்திய ஆய்வில் இந்த தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
88 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில். 6 டெல்டா வைரஸ் தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.