தேயிலை கொழுந்தின் விலை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

தேயிலை கொழுந்தின் விலை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

தேயிலை கொழுந்தின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென சிறுதேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், 100 முதல் 130 ரூபாவிற்கு இடைப்பட்ட அளவில் காணப்பட்ட தேயிலை கொழுந்தின் விலை, அமெரிக்க டொலருக்கு நிகராக அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் ஒரு கிலோ கிராம் தேயிலை கொழுந்தின் விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளது என சிறு தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் துஷார பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

தேயிலை துறைக்கு கிடைத்துள்ள இந்த இலாபமானது நேரடியாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கிடைத்துள்ளது எவ்வாறிருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தேயிலை உற்பத்தியானது, இந்த முறை ஓரளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

உரத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அடுத்த வாரம் முதல், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சலுகை விலையில் யூரியா உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் துஷார பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image