எரிபொருள் அனுமதியைப் பெற 5 மில்லியனுக்குஅம் அதிகமானவர்கள் பதிவு
தேசிய எரிபொருள் அனுமதிக்காக இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துள்ளனர் என்று இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு, ICTA, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் (IOC) மற்றும் இலங்கையின் இரண்டு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டு முயற்சினாலேயே தேசிய எரிபொருள் அனுமதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ICTA சுட்டிக்காட்டியுள்ளது.
"சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், பிரதேச மட்ட அரசாங்க அதிகாரிகள், அடிப்படை மட்டத்திலிருந்து உதவி வழங்குவதாக என்று ICTA ட்வீட் செய்தது.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் பாஸ் QR குறியீடு முறை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நேற்றுவரை நடைமுறையில் இருந்த இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்திற்கமைவாக எரிபொருள் வழங்கும் முறை மற்றும் ஏனைய முறைகள் இனி நடைமுறையில் இருக்காது என்றும் QR குறியீட்டு முறையை ஏற்றுக்கொண்ட எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.