காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை வௌியேறுமாறு அறிவுறுத்தல்!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை வௌியேறுமாறு அறிவுறுத்தல்!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர், அங்கிருந்து வெளியேற வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

காலி முகத்திடல் மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் உள்ள அரச மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட நிலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள் மற்றும் பயிர்செய்கை என்பன அகற்றப்பட வேண்டும் என பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்கள் தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image