எட்டாயிரம் மாணவர்கள் கல்வியியற் கல்லூரிகளில் இணைக்க தீர்மானம்
கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்கு 8000 இற்கும் அதிகமான மாணவர்களை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் (பாடசாலை அலுவல்) லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.
2019 - 2020 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா கற்கைநெறியை தொடர்வதற்கு இரு குழுக்களாக மாணவர்கள் இணைத்துக்கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வு முடிவுகளில் தாமதம்!
ஆசிரியர் சேவை சுற்றறிக்கையில் உள்ளீர்க்கப்படாத விடயம் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
அதற்கமைய, வர்த்தமானி அறிவித்தல் வௌியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் எட்டாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னர் 2016, 2017ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை தோற்றி மாணவர்கள் இரு குழுக்களாக இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தினமின