அனைத்து அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரமும் மூன்று நாட்களுக்கு இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் முதலான நாட்களில் பாடசாலைக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி மூலமாக அல்லது மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் பணிகளை தொடர முடியும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், போக்குவரத்து சிரமங்கள் அல்லாத பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர் குழாம் மற்றும் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இணையவழி நிகழ்நிலை முறைமையில் கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.