அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக புதிய யோசனைத் திட்டம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக புதிய யோசனைத் திட்டம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான யோசனைத் திட்டம் ஒன்றை தயாரிப்பதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் பொதுச்செயலாளர் தம்மிக்க முனசிங்க இது குறித்து வேலைத்தளத்திடம் கருத்து வௌியிடுகையில்,

Dammikka_large.png

150,000 அளவிலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரசு சேவையிலும், மாகாண அரச சேவையிலும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த அரசாங்கம் அரச சேவை சுமையாக உள்ளது என மக்களுக்கு தவறான ஒரு பிம்பத்தை காட்டியது. அரச சேவையில் அதிகமானோர் முப்படையினரும், பொலிஸாரும் இருக்கின்றனர். அரச சேவையின் சம்பளத்தில் அதிகப்பங்கு அவர்களுக்கு செல்கின்றது. ஆனால் அரச சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும், அவர்களால் பயனில்லை என்றவாறான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மொழிபெயர்ப்பாளர் சேவை தரமுயர்த்துதல் நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு: பெயர்ப்பட்டியல் இணைப்பு

இலங்கை நிர்வாக சேவையில் தரமுயர்த்தல் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு

நமது நாட்டில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் ஒன்று இல்லை. கடந்த அரசாங்கத்திலும் இல்லை. இந்த அரசாங்கத்திலும் இல்லை. பட்டதாரிகள் போராடியே வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்கின்றனர். பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்ட பின்னர் அவர்களை இந்த பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. அங்குதான் பிரச்சினை இருக்கின்றது.

அரச சேவை மாகாண அரச சேவை என்ற இந்த அனைத்திலும் அவர்கள் கடமையில் ஈடுபடுகின்றனர். அனர்த்த நிலைமை ஏற்பட்டால் கடமையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களை இந்த பொருளாதார அபிவிருத்தி செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான வேலைத்திட்டம் இல்லை.

எனவே அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான யோசனைத் திட்டம் ஒன்றை நாங்கள் தயாரித்து வருகின்றோம். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு திட்டம் ஒன்று இருக்க வேண்டும். அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தற்போது சேவை யாப்பு இல்லை. கடமை பட்டியலும் இல்லை. எனவே நாங்கள் இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் அமைச்சருடன் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம். - என்றார்.

என ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் பொதுச் செயலாளர் சம்பிக்க முனசிங்க தெரிவித்தார்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image