செனகலில் இருந்து சுமார் 300 பேரை சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு ஸ்பெயின் கெனரித் தீவுகளுக்கு செல்ல முற்பட்ட படகுகள் காணாமல் போயுள்ளன என்று நாடுகளின் எல்லைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழு தெரிவித்துள்ளது.
65 பேரை ஏற்றிச் சென்ற படகொன்றும் 50 - 60 பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகும் இவ்வாறு காணாமல் போயுள்ளன என்றும் செனகலில் இருந்து பயணித்து 15 நாட்களில் இப்படகுகள் காணாமல் போயுள்ளன என்று என்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஹெலனா மலேனோ ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது படகு கடந்த ஜூன் மாதம் 27ம் திகதி 200 பேரை ஏற்றிச் சென்றுள்ளது. அவர்கள் படகில் சென்றதன் பின்னர் எவ்விதமான தொடர்பும் இதுவரை கிடைக்கவில்லை என்கின்றனர் அப்படகில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்.
தென் செனகனின் கபோன்டைன் பகுதியில் இருந்து மூன்று படகுகளம் கிளம்பியுள்ளன. கெனரி தீவுகளில் இருந்துசுமார் 1700 கிலோ மீற்றர் தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. செனகலில் ஒரே பகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேரே இப்படகுகளில் சென்றுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கெனரி தீவே ஸ்பெயினுக்கு புலம்பெயர்வதற்கான முக்கிய மத்திய பயணப்பிரதேசமாக காணப்படுகிறது. குறுகிய எண்ணிக்கையானவர்கள் மெடிடெரானின் கடற் பிரதேசத்தினூடாகவும் ஸ்பெயினை சென்றடைகின்றனர். கோடைக் காலகத்தில் இப்பகுதியினூடாக மக்கள் அதிகமாக புலம்பெயர்வார்கள்.
உலகில் ஆபத்தான புலம்பெயர்வு பாதைகளில் அட்லாண்டிக் புலம்பெயர்வு பாதையும் ஒன்றாகும். ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள் பரவலாக இப்பகுதியை சட்ட விரோத புலம்பெயர்வுக்கு பயன்படுத்துகின்றனர். ஐநாவின் குடிப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தரவுகளுக்கமைய, கடந்த 2022ம் ஆண்டு 22 சிறுவர்கள் உட்பட 559 பேர் சட்டவிரோதமாக கெனரி தீவிற்கு புலம்பெயர் முற்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.