சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 34பேரைக் காணோம்!

சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 34பேரைக் காணோம்!

கடந்த வௌ்ளிக்கிழமை துனிஸியா கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 34 ஆப்பிரிக்க நாட்டவர்கள் காணமல் போயுள்ளனர் என்று துனிஷிய அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

இரண்டு நாட்களில் இடம்பெற்ற ஐந்தாவது படகு விபத்து இதுவாகும். இவ்விரண்டு நாட்களுக்குள் சுமார் 67 பேர் வரை உயிரிந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் இத்தாலி கரையோரப்பாதுகாப்புப் படையினர் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு கருத்து வௌியிடுகையில் இரு வெவ்வேறு விபத்துக்களில் கடந்த வியாழக்கிழமை தெற்கு இத்தாலி கடற்பரப்பில் 750 சட்டவிரோத குடியேற்றவாசிகள் காப்பாற்ற ஒரு மணி நேரத்துக்குள் சட்டவிரோதமாக துனிஷிய கடற்பரப்பை கடந்து இத்தாலியை அடைய முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 33 பேர் வரை காணமல் போயுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்வாக்ஸ் நகர கடற்பரப்பில் விபத்துக்குள்ளனான படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்னளர் என்று துனிஷிய நீதிபதியொருவர் ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு நாட்களஞக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிவந்த 56 படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அவற்றில் சுமார் அழைத்து வரப்பட்ட சுமார் 3000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய பாதுகாப்பு அதிகாரியான ஹுசேம் ஜபாலி தெரிவித்துள்ளார்.

ஐநா தகவல்களுக்கமைய, இந்த ஆண்டு மட்டும் சுமார் 12,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துனிஸியா ஊடாக இத்தாலியை சென்றடைந்துள்ளனர். இதுவே 2022ம் ஆம் ஆண்டளவில் இக்காலப்பகுதியில் 1,300 பேர் மாத்திரமே இவ்வாறு இத்தாலியில் அடைக்கலம் புகுந்துள்ளனனர். ஆரம்பத்தில் லிபியா ஊடாவே குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாக பயணித்தனர். தற்போது துனிஸியாவின் ஸவாக்ஸ் நகரம் பிரதான புறப்படு நகரமாக காணப்படுகிறது. உள்நாட்டு யுத்தம் மற்றும் வறுமை நிலவும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை தேடி ஐரோப்பாவை வந்தடைகின்றனர்.

கடந்த மாதம், ஜனாதிபதி கைஸ் சையத், உரிமைக் குழுக்கள் மற்றும் ஆப்பிரிக்க யூனியனால் பரவலாக விமர்சிக்கப்பட்ட கருத்துக்களில், ஆவணமற்ற துணை-சஹாரா ஆப்பிரிக்கக் குடியேற்றம் துனிசியாவின் மக்கள்தொகை அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சதி என்று கூறினார்.

துனிஸியாவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வௌியேற்றுமாறு பாதுகாப்புப் படையினர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பாவில், குறிப்பாக அயல்நாடான இத்தாலியின் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்துவதில் தவறி விடுமோ என்று அச்சமடைந்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் பாரிய நிதி நெருக்கடியை துனிஸியா சந்தித்து வருகிறது.

2021ம் ஆண்டு தொடக்கம் துனிஸியா அரசியல் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்நாட்டு ஜனாதிபதி அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்து பாராளுமன்றத்தை மூடியதுடன் ஆணைகளுடானான நாட்டை ஆட்சி செய்து வருகிறது.

துனிசியாவில் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படாவிட்டால், வட ஆபிரிக்காவில் இருந்து தமது எல்லைக்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பெருமளவில் எதிர்நோக்கும் நிலை ஐரோப்பாவிற்கு ஏற்படும் என்று தெரிவித்துள்ள இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சர்வதேச நாணய நிதியம் உட்பட நாடுகள் துனிஸிாவை வீழ்ச்சியில் இருந்து மீட்க விரைவில் உதவவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image