What Are You Looking For?

Popular Tags

ஆட்குறைப்புக்கு தயாராகும் கூகுளின் தாய்நிறுவனம்!

ஆட்குறைப்புக்கு தயாராகும் கூகுளின் தாய்நிறுவனம்!

கூகுளின் தாய் நிறுவனமான (Alphabet) ஆல்பபெட் 12,000 ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கூகுள் மற்றும் (Alphabet) ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் இந்த பணி நீக்கங்களுக்கு 'முழு பொறுப்பையும்' ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்த ஆற்குறைப்பானது (Alphabet) ஆல்பபெட்டின் 6வீத பணியாளர்களை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்பு, மைக்ரோ​சொப்ட் தனது 10,000 ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்று கூறியதுடன் சில வாரங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனமும் 18,000 பணியாளர்களை குறைக்க உள்ளதாக அறிவித்து இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image