துருக்கியில் மீண்டும் நில அதிர்வு!

துருக்கியில் மீண்டும் நில அதிர்வு!

​சிரிய எல்லைக்கு அருகே தெற்கு துருக்கியில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று மாலையில் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்னர் ஏறபட்ட நில அதிர்வினால் முப்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் இந்நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நில அதிர்வின் காரணமாக பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் ரொய்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இந்நில அதிர்வின் காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்தமையினால் தூசு நிறைந்து காணப்பட்டதாகவும் இவ்வதிர்வு எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாகவும் ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image