சம்பள உயர்வு கோரி இங்கிலாந்தில் ஆசிரியர்கள் போராட்டம்!

சம்பள உயர்வு கோரி இங்கிலாந்தில் ஆசிரியர்கள் போராட்டம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பிரதேச பாடசாலைகள் ஆசிரியர்கள் இணைந்து பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நேற்று (01) முன்னெடுத்துள்ளனர்.

ஏழு நாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையின் முதல் நாளான நேற்று பிரித்தானியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான தேசிய கல்விச் சங்கத்தின் அங்கத்தவர்களினால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர்களுடன், இங்கிலாந்தில் உள்ள ஆறாம் வகுப்பு கல்லூரிகளில் உள்ள தனித்தனியாக வாக்களித்த தேசிய கல்விச் சங்கத்தின் உறுப்பினர்களும் வேல்ஸில் உள்ள உதவி ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது. 7 நாட்கள் நடவடிக்கையினால் சுமார் 23,400 பாடசாலைகள் பாதிக்கப்படும் என்று கணித்துள்ள தேசிய கல்விச் சங்கம், ஆனால் ஒவ்வொரு பாடசாலையுமாக பார்க்கும் போது 4 நாட்கள் மாத்திரமே பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் சம்பளம் காணப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் 14, 28, மார்ச் முதலாம் திகதி, 2ம் திகதி, 15ம் திகதி மற்றும் 16ம் திகதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com