மெக்ஸிகோவில் கடும் வெப்பம் - நூறு பேர் வரை மரணம்!

மெக்ஸிகோவில் கடும் வெப்பம் -  நூறு பேர் வரை மரணம்!

மெக்ஸிகோவில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை காரணமாக சுமார் நூறு பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு மேலாக அந்நாட்டில் வெப்பநிலை 50 செல்சியசாக காணப்படுவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவானோர் உஷ்ண தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சில மரணங்கள் நீரிழப்பு காரணமாகவும் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் சில நகரங்களில் வெப்பநிலை இன்னும் அதிகமாகவே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image