நேற்று அதிகாலை தென் கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற நில அதிர்வில் இதுவரை 4300 இற்கும் அதிமானவர்கள் உயிரிழந்ததுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எணணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார தாபனம் எச்சரித்துள்ளது.
கடுமையான மழை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் கட்டிடங்களுக்குள் செல்வதற்கு அஞ்சும் நிலையில் வெட்டவௌிகளில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று அதிகாலை வேளையில் ஏற்பட்ட நில அதிர்வு 7.8 ரிச்டர் அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது.
துருக்கியில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வுகளில் இதுவும் ஒன்று என நில அதிர்வு ஆய்வாளர்கள் கருத்து வௌியிட்டுள்ளனர்.