ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்து: 288 பேர் பலி: 1,000 பேர் காயம்

ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்து: 288 பேர் பலி: 1,000 பேர் காயம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், நேற்று முன்தினம் இரவு, மூன்று ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில், 288 பேர் பலியானதுடன், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 

மேற்குவங்காளத்தின் ஷாலிமார் நகரிலிருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல் விரைவு தொடருந்து ஒடிசாவின்  பாலாசோர் தொடருந்து நிலையப் பகுதியில், மணிக்கு  127 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளது.

 

இதன்போது, குறித்த தொடருந்து, தவறுதலாக சரக்கு தொடருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்துள்ளது.

 

பின்னர் அந்த தொடருந்து, சரக்கு தொடருந்தை மோதிய நிலையில் சரக்கு தொடருந்தின் பெட்டிகள், அருகில் உள்ள தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்டுள்ளன.

இதன்போது மறுபுறுத்தில் பெங்களுரில் இருந்து மேற்கு வங்காளத்தை நோக்கிச் பயணித்த விரைவு தொடரூந்து, தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்ட நிலையில் கிடந்த, சரக்கு தொடருந்தின் பெட்டிகளுடன் மோதியதில் இந்தப் பாரிய விபத்து நேர்ந்துள்ளது.

 

ஒடிசா தொடருந்து விபத்துக்கு காரணமானவர்கள், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு நேற்று சென்ற இந்திப் பிரதமர் நரேந்திர மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

 

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், இது மிகவும் வேதனையான சம்பவமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image