பங்களாதேஷ் தொழிற்சங்கத் தலைவர் அடித்துக்கொலை!

பங்களாதேஷ் தொழிற்சங்கத் தலைவர் அடித்துக்கொலை!

​தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்த முயன்ற தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் பங்களாதேஷில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷின் ஆடை உற்பத்தி மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரான ஷஹிதுல் இஸ்லாம் என்ற 45 வயது தொழிற்சங்க செயற்பாட்டாளரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் ஒதுக்குப்பறமாக ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகமாக அமைந்துள்ள காசிபூர் பிரதேசத்தில் கடந்த இரு மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை தொடர்பில் பேச்சுக்களை நடத்தச் ஒன்று கூடியபோது குறித்த தொழிற்சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவருடன் உடனிருந்த மற்றொரு தொழிற்சங்க அமைப்பாளரான அஹமட் (35) தாக்கதலுக்குள்ளாகி தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரின்ஸ் ஜகுவார் ஸ்வெட்டர் தொழிற்சாலை ஊழியர்களுக்கு இரு மாதங்கள் சம்பளம் வழங்க தவறியுள்ளது. இதனையடுத்து ஹஜ் பெருநாளுக்கு முன்னர் சம்பளம் மற்றும் பெருநாள் கொடுப்பனவு போன்றவற்றை ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் தானும் இஸ்லாமும் பல தடவைகள் குறித்த தொழிற்சாலைக்கு பல தடவைகள் சென்றுள்ளதாக காயமடைந்த தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இஸ்லாம் மற்றும் பிற தொழிலாளர் தலைவர்களின் தலையீட்டிற்குப் பிறகு, தொழிற்சாலை அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஊதியம் வழங்கப்படும் என்று உறுதியளித்ததாகவும் அவ்வாறு வழங்கப்படாதபோது, குறித்த தொழிற்சங்கத் தலைவர் உதவிக்கு அழைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கொலை செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவரும் ம் பிற அமைப்புகளின் சக தொழிற்சங்கத் தலைவர்களின் குழு நிருவாகத்துடன் கலந்துரையாட தொழிற்சாலைக்குள் நுழைந்ததாகவும் ஆனால் நிருவாகம் சார்பில் கலந்துரையாட ஒருவரும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தொழிற்சங்கத் தலைவர் தன்மீது தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சுமார் இரவு 8.00 மணியளவில் ஊழியர்கள் மத்தியில் பேசிய போது, அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கோரியதுடன் மறுநாள் தொழிற்சாலை ஆய்வு மற்றும் நிறுவனத் துறைக்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image