வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை ப்ரெண்டிக்ஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதுடன் கம்பனியையும் மூடியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
All Stories
புலம்பெயர் தொழிலாளர் ஒருவரின் மரணம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள கட்டார் கத்தார் உலகக் கோப்பையின் நிறைவேற்று அதிகாரி நாசர் அல்-காதர் "இறப்பு வாழ்க்கையின் இயல்பான பகுதி" என்று கூறினார்.
தொழிலுக்காக ஓமானுக்கு பயணிக்கும் போது உரிய நடைமுறைகளை மாத்திரம் பின்பற்றுமாறு ஓமானிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இன்று உலக கண்ணியமான தொழிலுக்கான தினமாகும். இன்றைய தினத்தில் உலகில் அனைத்து மூலை முடுக்குக்களிலும் வாழும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடைய வேதன நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி ஓமான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்கள் முகவர் அலுவலகங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு தொழில்வழங்குநர்களின் தேவைக்கேற்ப தெரிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வௌியாகியுள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பல உற்பத்தித்துறை மற்றும் சேவைத் துறை என்பன பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதுடன் பலரது ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாது போயுள்ளது. அத்துடன் புதிய நியமனங்கள் வழங்கப்படாமையும் இலங்கையின் உற்பத்தியை 8 வீதமாக குறைவடைந்துள்ளது என்று என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான பிரசார செயற்பாடு இன்று (25) ஆரம்பமாகிறது. 16 நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இப்பிரசார செயற்பாட்டின் இந்த ஆண்டுக்கான தொனிப்பொருள் "பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர செயல்பாடுவோம்!" என்பதாகும்.
இலங்கையின் மலையக தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான தினம் (30.10.1964). இன்றாகும்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் இலங்கையில், ஆடை உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண்கள் தொழில் இழப்பு காரணமாக பெரும்பாலான பெண்கள், இப்போது வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலாளிகளாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளனர்.
ஆசிரியைகளின் ஆடை விவகாரம் தற்போது சமூகத்தில் மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
<கொழும்பு ஐநா மனித உரிமை பிரதிநிதிக்கு மனோ கணேசன் கடிதம்>
பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள்.
ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த ஐநா மனித உரிமை ஆணைகுழு கூட்டத்தில் இவ்விவகாரம் எடுத்தாளப்பட உரிய அவகாசம் கிடைக்கும் என கொழும்பு ஐநா அலுவலக வளாகத்தில் இருந்து செயற்படும், ஐநா மனித உரிமையாளரின் பிரதிநிதி, சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் ஜுஹன் பெர்னாண்டசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் கோரியுள்ளார்.
மனோ கணேசன் எம்பியின் மின்னஞ்சலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நவீன அடிமைத்தனங்கள், அதன் மூல காரணங்கள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகிய விவகாரங்களுக்கான, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடா ஐநா மனித உரிமை ஆணைகுழுவின் கடைசி கூட்டத்துக்கு சமர்பித்த அறிக்கையின்படி பின்வரும் பாரதூரமான நிலைமைகள் பெருந்தோட்ட சமூகத்தின் மத்தியில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
1)மனிதர் வாழ தகைமையற்ற வாழ்விடங்கள்,
2)அரைகுறை சுகாதார நிலைமைகள்,
3)போஷாக்கின்மை, வறுமை,
4)பெண்கள் மீதான அதீத சுமை,
5)சிறுவர் தொழிலாளர்,
6)வேலைத்தள விபத்துகளுக்கு முறையான நஷ்ட ஈடின்மை,
7)முறையற்ற வேலை நிலைமைமைகள்,
8)அதிக நேர வேலை குறை வேதனம்,
9)நவீன அடிமைத்தன வடிவங்கள்,
10)அதி சுரண்டல் பாரபட்சம்,
11)உடல்ரீதியான,
பேச்சுரீதியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்,
12)வீட்டு வேலை,
13)பாலியல் வேலை, கொத்தடிமை வேலை,
14)தனியார் நிறுவன தோட்டங்களில்,
அரச நிறுவன தோட்டங்களில், சிறு உடைமையாளர் தோட்டங்களில் நியாயமற்ற நாட்கூலி முறைமை,
15)தரமான கல்வி பெற வாய்ப்பின்மை,
16)மொழி பிரச்சினை,
17)அதிக தொகை பாடசாலை விடுகை,
18)உள்ளூர் தேசிய தொழில் சட்ட கண்காணிப்பு இன்மை,
19)துணைக்கு வரும் சிவில் அமைப்புகள் மீதான கண்காணிப்பு தொல்லை.
பெருந்தோட்ட சமூகம், இலங்கையில் வாழும் மலையக தமிழரில் ஒரு அங்கம். ஆகவே பெருந்தோட்ட சமூகத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு அவர்கள் சிறுபான்மை தமிழராக இருப்பதும் ஒரு காரணமாகும். அடுத்தது அவர்கள் மீதான நவீன கூலித்தொழில் அடிமைத்தனமாகும்.
இந்நிலையில் அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரசு தரப்பு, தோட்ட நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் பெருந்தோட்ட துறையில் நிகழும் நவீன கூலியடிமை, இன அடிமைத்தனம் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடும்படி கோருகிறேன்.
பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பிலான முன்மொழிவுக்கு பிரதான ஆசிரியர் சங்கங்களான இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளன.