உலக கண்ணியமான தொழில் தினம் 2022

உலக கண்ணியமான தொழில் தினம் 2022

இன்று உலக கண்ணியமான தொழிலுக்கான தினமாகும். இன்றைய தினத்தில் உலகில் அனைத்து மூலை முடுக்குக்களிலும் வாழும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடைய வேதன நீதிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எரிசக்தி, போக்குவரத்து, உணவு மற்றும் பிற முக்கியப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்த நிறுவனங்களின் இலாபவெறியால் உந்தப்பட்ட பரவலான பணவீக்கம் இன்னும் அதிகமான தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் வறுமையில் தள்ளுகிறது.

பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையை சமாளிக்க முடியாமல் 10% வீதமானவர்கள் அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவே முடியாமலும் சிரமப்படுகின்றனர்.

கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவை பொருட்களின் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, எனினும் இத்தகைய நெருக்கடிகளிலும் பெருநிறுவனங்கள் பெரும் லாபம் தடைப்படாமல் கிடைக்கிறது.

தொழிற்சங்க செயற்பாடுகளை மட்டுப்படுத்தல், குறிப்பாக கூட்டுப்பேரம் பேசுவது மட்டுப்படுத்தப்படுவதனால் தொழிலாளர்கள் தாம் பெறவேண்டிய வேதனத்தை விடவும் ஏற்கனவே குறைவாக பெறுகின்றனர்.

பெரும்பாலான நாடுகளில் ஆகக்குறைந்த வேதனம் போதியதாக இல்லையென்றபதுடன் இதனால் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர்.

 வேதன நீதி

ஊதிய நீதி என்பது பல்தேசிய கம்பனிகளின் பேராசைக்கு சார்பாக தொழிலாளர்கள் பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் பேராசையின் நலன்களுக்காக உடைக்கப்பட்ட தொழிலாளர்கள், அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையிலான சமூக ஒப்பந்தத்தின் ஒரு மூலக்கல்லாகும்.

தொற்றுநோய் ஆரம்பமாகியதன் பின்னர் 573 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அவர்கள் இப்போது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.9% ஐக் கட்டுப்படுத்துகிறார்கள், அதேவேளை, ஒவ்வொரு நாளும் 700,000 க்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படுகின்றனர்.

அரசாங்கங்கள் திட்டமிட்டு எடுக்கும் முடிவுகளின் காரணமாக மூலம் சமூக ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள முறிவானது தொழிற்சங்க எதிரான கட்டுப்படுத்தலாக ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நியாயமான தொழிலாளர் சட்டங்கள் புதிய உயர்வை அடைவதை உறுதிப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது.

தற்போது உருவாகியுள்ள பணவீக்கமானது ஏதாவது ஒரு வகையில் உழைக்கும் மக்களின் தவறு என்றும் மக்களின் வருமானம் உயர்வடைவதானது மோசமான விளைவுகளை தோற்றுவிக்கும் என்று சில பொருளியலாளர்களும் மத்திய வங்கியாளர்களும் பல அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பரப்பி வருகின்றமையானது வெறும் கற்பனையானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது உண்மையல்ல: தன்னியக்க ஊதியக் குறியீட்டைக் கொண்ட மீதமுள்ள சில நாடுகளில் பணவீக்கம் ஊதியத்தை உயர்த்தாத நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அதே மட்டத்தில் உள்ளது.

திருப்புமுனை

சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த எதிர்காலத்தை குடும்பங்களுக்கும் பொது மக்களுக்கும் இல்லாமல் செய்துள்ள பணவீக்கத்திற்கு மத்தியில் சம்பள வேறுபாட்டை ஈடு செய்யுமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வது தவிர மாற்று வழியை தேடும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிறுவன ரீதியான தேவைகளுக்கு கீழ்படிய வேண்டிய நிலையில் உள்ள அரசாங்கங்களினால் கட்டுப்பாடுகளுக்குள்ளாதல் அல்லது தொழிலை இழக்கவேண்டிய அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர்.

உலக தொழிற்சங்க அமைப்பானது முறைசார் மற்றும் முறைசாரா தொழிலைச் சார்ந்தவர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் எந்த தொழிலை செய்தாலும் அனைத்து தொழிலாளர்களும் வேதனத்திற்கான நீதிக்காக முன்னிற்கிறது.

உலக வெப்பமயமாதல், ஆயுத மோதல்கள் மற்றும் நிறுவனங்களின் பேராசை மற்றும் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளின் ஏகபோகத்திற்கு அடிபடியாமல் மக்களின் தேவைக்கமைய ஆட்சி செய்யவேண்டும் என்று அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ளும் திரும்புமுனை உருவாவது அவசியம்.

வேதனத்திற்கான நீதியை மனதிற்கொண்ட புதிய சமூக ஒப்பந்தமொன்று தற்போது உலகுக்கு தேவையாக உள்ளது.

உலகில் ஏற்பட்டுள்ள 575 மில்லியன் தொழிற்பற்றாக்குறையானது இல்லாமல் செய்யப்படவேண்டும். அடிப்படை தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும். சமத்துவத்தினூடாக பாகுபாடுகள் களையப்படவேண்டும். அனைவருக்கும் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். காலனித்துவத்தின் சுவடுகளிலிருந்து பிணைக்கப்படாத உள்ளடக்கிய உலகப் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அந்த அத்திவாரங்களின் மீது, அமைதியை கட்டியெழுப்ப முடியும் மற்றும் இன்றைய மற்றும் எதிர்காலத்தின் அழுத்தமான சவால்களை சந்தித்து சமாளிக்க முடியும் என சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது.

உலக கண்ணியமான தொழில் தினம் சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பினால் 2008ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இன்றைய தினமானது.

நூற்றுக்கும் மேற்பட்ட  நாடுகளில் மக்கள் தொழிற்சங்கங்களின் வெற்றிகளை கொண்டாடவும் தமது சனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக தியாகங்களை செய்தவர்களின் சேவையை கௌரவப்படுத்தவும் சிறந்த அடைவுக்காக தொடர்ந்து போராடும் தினமாகவும் பார்க்கப்படுகிறது. இதனூடாக ஒரு வீதமானவர்கள் மாத்திரம் நன்மை பெறுவதை விடவும் முழு சமுதாயமும் நன்மை பெறும் என்பதில் ஐயமில்லைலை.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image